Saturday, October 22, 2011

உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!


ஆசிரியரிடம் அவசியம் இருக்கவேண்டிய குணநலன்களாக நீங்கள் கருதுவது?
1. ஒழுக்கம்
2. வகுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை
3. கற்றுக்கொடுப்பதில் பிரமாதம் என பெயரெடுக்கும் ஆற்றல்
4. சொல்லும் வண்ணம் முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் பாங்கு
ஒரு நிறுவனத்தின் / ஒரு நண்பனின் வழி காட்டுதல் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடக் கூடுமா?
நிச்சயமாகக் கூடும். பாரதிராஜா என்கிற மாணவன் ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தேர்ச்சி பெறாத மாணவனாக எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தான். பத்தாம் வகுப்பில் நடுநிலையான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தான். நானே விருப்பப்பட்டு 11ம் வகுப்பில் பொருளாதாரப் பிரிவில் சேர்த்தேன். 12ம் வகுப்பில் 1100 மதிப்பெண் எடுத்தான். நல்ல கல்லூரியில் சேர்ந்து கொண்டு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக் கொள் என்று அறிவுறுத்தினேன். திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைத்துப் படித்தான். ஐ.அ.ந. தேர்வுக்கு தயார்செய்து கொண்டிருந்த நண்பனை நட்பாக்கிக் கொண்டான். அந்த மாணவனும் பாரதிராஜாவை உயர்த்திப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டு ரிசர்வ் வங்கி தேர்வு எழுதுவதற்கு உதவியிருக்கிறார். நண்பனின் உதவியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று இன்று அம்மாணவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
ஒருவரின் வளர்ச்சி It depends upon the Friends, it depends upon the Institution, and It depends upon the School என்று தான் அமைகிறது.
ஒருவருடைய நன்னடத்தை, வாழ்க்கைத்தரம், இலக்கு, தன்னம்பிக்கை, வெற்றி ஆற்றல் உயர்வதற்கு காரணமாவது ஒருவர் படிக்கும் கல்வி நிலையத்தின் தரத்ததை பொறுத்து அமையும் என்பது உண்மை.
மாணவ மாணவிகளுக்கு நீங்கள் தரும் அறிவுரை…
தன்னம்பிக்கை, ஓய்வில்லாத உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து செயல்படும் மாணவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
முயற்சி என்பது வேள்வி உழைப்பு என்பது தவம் சாதனை என்பது வரம்
தவம் இருந்தால் தான் வரம் கிடைக்கும். யாரொருவர் உழைக்கிறாரோ அவர் தான் முன்னே வர முடியும் என்பதை உணர வேண்டும். தியாகம் செய்தவர்கள் மட்டுமே உயர்வடைய முடியும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் தூக்கத்தை, பொழுது போக்கை தியாகம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்,
“Enjoy now suffer later or Suffer now enjoy later”
இப்பொழுது கஷ்டப்பட்டு பலனை பின்னாளில் அனுபவிக்கப் போகிறீர்களா? இப்பொழுது விளையாடி பின்னாளில் கஷ்டப்படப் போகிறீர்களா? எங்கள் பள்ளியின் வகுப்பறை ஒவ்வொன்றிலும் நாங்கள் எழுதியிருக்கும் வாசகம் இதுதான்.

0 comments:

Post a Comment