Saturday, October 22, 2011

சவாலே சமாளி


விவரிக்க முடியல. என்னத்த சொல்ல     இந்த மனுசனிடம் எப்படி தான்         சமாளிக்கப்போறேனோ தெரியல.
…எதைப்பேசினாலும் நம் பலவீனத்தை தெரிந்து கொண்டு அதைப்பயன்படுத்தியே நம்மீது பாய்கிறார். என்ன செய்யறதுனே தெரியலை.

…என்ன! இந்த விஷயத்திற்கு இப்படி வெடித்து விழுகிறார். அப்பப்பா எப்படித்தான்
இந்த மனுசனோட குப்பைக் கொட்டறதோ போங்க.
…மனுசங்கிட்ட எதைப்பத்தியும் பேச முடியலை. எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுருக்கிறார். எப்படி சமாளிக்கிறது.
…அய்யோ அந்தாளா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாரே. எப்படி சமாளிக்கப் போறேனே தெரியல.
…எதைச்சொன்னாலும் சரின்னு உடனே சொல்லு வாரே தவிர. ஒன்னும் அவரிடமிருந்து வராது.
…எதைச் சொன்னாலும் முதல்வேளையா அதைதள்ளிப் போடுவதுதான் முதல்வேலை. இவரிடம் இந்த விஷயத்தை எப்படி கொண்டுப் போகப்போறேனு தெரியலை.
…ஏம்பா அந்தாளிடமிருந்து எதையாவது புரிந்து கொள்ள முடிகிறது. என்ன நடக்குதுனே தெரியலயே?
…எதற்கெடுத்தாலும் இப்படி கத்துகிறாரே நம்மோட ஒத்துழைப்பார்னு நினைக்கறே?!
மேற்கண்டவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேலானது உங்கள் புலம்பலாக இருக்க வைத்தவர்கள் இருந்தார்களா? இருக்கிறார்களா?
ஆமாங்க அதுக்கென்ன செய்யறது?… என்பது உங்கள் பதிலாக இருப்பின் இனிவருவது அப்படிப்பட்டவர்களை சமாளிக்க உதவும் என நம்புகிறேன்.
மேலே உள்ள அனுபவத்திற்கு காரணமாக உள்ளவர்கள் செயல் நடந்தேறனும், செயல் சரியா நடக்கனும், மற்றவர்களோடு சேர்ந்திருக்கனும், பாராட்டு கட்டாயம் இருக்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக நமக்கு சவாலாக இருக்கலாம். அவ்வாறு உள்ளவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நம் பேச்சு, நடவடிக்கை இருக்கும் பட்சத்தில் நமக்கு சாதகமான வகையில் மாறிவிடுவார்கள்.
பிரச்சனை என்றாலே தீர்வு மறைக்கப் பட்டுள்ள தீர்வின் மறுவடிவம் தான். பிரச்சினை தீர்வின் வேஷம். வேஷம் கலைந்தால் தீர்வு தெரியும். விடைகிடைக்காத பிரச்சனை என நாம் நினைப்பது தீர்வை நோக்கிய வழியில் இருக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிர்வழி விளையாட்டில் சரியான வழி கண்டுபிடிப்பது போல பிரச்சனைக்குரிய மனிதர்கள் என்றால் அவர்களுக்கான தீர்வு அவர்களிடம் அல்லது நம்மிடம் கூட இருக்கலாம். போல்ட்-நட்டு உறவுப் போல இரண்டும் இணைந்து உரிய பயன்பெற வேண்டும். மாற்றம் எங்கு வேண்டுமோ அங்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாகவே அது நமது பக்கம் தான் இருக்கும். நமது மாற்றம் அவர்களை மாற்றும் என்பது தான் உண்மை.
தீர்வுக்கான முதற்கட்டம் பிரச்சனையை அலசிப்பார்ப்பது. சும்மாவா சொன்னார்கள் குட்டையை குழப்பினால் கூட மீன் பிடிக்க முடியும் என்று.
பிரச்சனைக்குரியவர்கள் என்று நாம் நினைக்கும் தருணம் அவர்களைப் பற்றிய வேறுபாடுகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். நம்மோடு அவர்களுக்குரிய ஒத்த குணங்களை நினைப்பது இல்லை. இதுவே அவர்கள் நமக்கு சவாலாக தோன்ற முதற்க் காரணம்.
சற்றுச்சிந்தித்துப் பாருங்கள். சவாலாக இருப்பவர்களின் நடவடிக்கைகளை வேறு கோணத்தில் நாம் புரிய வாய்ப்பு கிடைக்கும். ஒரு வேளை அதுவே விடையாகவும் இருக்கலாம். நமக்கு பிரச்சனைக்குரியவராக இருப்பவர் வேறுசிலருக்கு சாதகமாக சுமூகமான உறவுடன் பணியாற்றலாம். ஏன்? எப்படி? வேறுபாடு களுக்கும் ஒற்றுமைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பு தான் காரணம். பல சமயங்கள் அவர்களது நடவடிக்கை நம்மை உதாசினப் படுத்துவதாக நினைத்துக் கொள் கிறோம். இங்கு எலினார் ரூஸ்வெல்ட் என்பவரின் வார்த்தை களை நினைவுக்கூற விரும்புகிறேன்.
“உங்களுடைய அனுமதியின்றி யாரும் உங்களை தரக்குறைவாக உணரவைக்க முடியாது”
மற்றவர்களுக்காக மாறுவது என்பது முகமாற்றம், உடல்மொழி, சொல்லும் விதம் இவற்றில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் அவர்களை நாம் சரியாக புரிந்து கொண்டோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். நியூட்டனின் மூன்றாம் விதி “ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு” என்பது போல இங்கு எதிரானவர்கள் என நாம் நினைத்திருப்பவர்களிடமிருந்து எதிர்க்காத செயல் நம்மை நோக்கி வருவதை உணரலாம்.
செயல்நடந்தேறனும் என்பதில் மட்டுமே முதற்க்கவனமாக இருப்பவர்களிடம் நாம் அதிகம் பேசாமல் இரத்தினச் சுருக்கமாக பேசவேண்டும். அவர்கள் செயல்வேகம் எதிர்ப்பார்ப்பவர்கள். எனவே நம் சுருக்கமான பேச்சு அவர்களுடைய நோக்கத்தை புரிந்து கொண்டு விட்டதாக உணர வைக்கும். அப்படி செய்வதால் உங்கள் சொற்களில் கவன ஈர்ப்பு ஏற்பட்டு உடன்பட்டு செயல் உருவாக வாய்ப்புண்டு.
செயல் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்களிடம் கொஞ்சம் விபரமாக பேசுவது நல்லது. ஏனெனில் செயலைப்பற்றிய விபரம் கொடுப்பது செயலை சரியாக கையாள உதவுகிறார் என்பதை புரிந்து கொள்வார்கள். அதனால் அவர்களுடைய ஒத்துழைப்பு நமக்கு கிட்டும்.
எதைப்பற்றி பேசினாலும் செய்தாலும் அவருக்கு தெரிந்ததாக இருக்கிறதா? அப்படிப் பட்டவர்களை கையாளுவதில் கவனம் தேவை. அது மிகச் சுலபமானது அல்ல. அவர்களுக்கு புதிய கோணத்தில் விசயத்தை கொடுக்க வேண்டும். முடிந்தவரை “இது என்னுடைய கருத்து, எனக்கு, நான் என்கிற வார்த்தைகளை தவிர்த்து நீங்கள் சொல்வது போல், உங்களைப் போல்தான் நானும் இந்த விஷயத்தில்” என அவர்களை முன்னிருத்தி பேசுவது நல்லது. அப்படி செய்யும் போது உகள் தோளில் ஆதர வாக ஒருகை அது யாருமையது என்றால் எல்லாம் தெரிந்த நம் நண்பருடையதாக இருக்கும்.
எல்லாம் தெரியும் ஆனால் உண்மையில் அப்படியில்லை என்பவர்களிடம் உங்களை முன்னிருத்தி பேசுங்கள் ஆதாரத்துடன் ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் கருத்தை சொல்லுங் கள் கேள்வி கேளுங்கள்.
நட்புறவில் நாட்டம் கொண்டவர்தான் ஆனாலும் நமக்கு சவாலாக இருக்கிறார் என்கிற நிலை என்றால் நம் விருப்பத்தைவிட அவர் களுடைய நோக்கத்திற்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் நம் உரையாடல் செயல் இருக்கும் பட்சத்தில் அவர்களை கையாளுவதில் சிக்கல் சிரமம் இருக்காது. நம்மை பற்றி அடுத்தவர்கள் எந்த அளவிற்கு அக்கறை உள்ளது என்ற கவனத்தில் குறியாக இருப்பவர்கள் அவர்களது நோக்கத்தில் இருந்து வேறுபடும் போது பாதிக்கப்படுகிறார்கள்.. அதனால் நமக்கு சவாலாக உருமாறுகிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக நம் நடவடிக்கை இருந்தால் நிச்சயம் அவர்கள் நம்மோடு கைகோர்த்து கொள்வார்கள்.
உலகில் பாராட்டுதலுக்கு பணியாதவர் கள் இருக்க முடியாது. பாராட்டு பெறுவது தன் நோக்கமாக கொண்டிருப்பவர்களிடம் அவர்களை பாராட்டும் படி நம் பேச்சும் நடவடிக்கைகளும் இருந்தால் அவர்களும் நாமும் ஒருபக்கம்.
இப்படி சவாலாக இருப்பவர்கள் நம் வெற்றிக்கு துணை புரிகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு சமாளிக்க கற்றுக்கொள்வோம். எனவே சவால் வெற்றிக்குத்தான். சமாளிக்க தயாராகுங்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Thanks :Author: ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)

0 comments:

Post a Comment