Saturday, October 22, 2011

வெற்றிச்சக்கரம்


         எனது நண்பரிடம், பேசிக்கொண்டிருக்கும் போது வெற்றி என்பது என்னவென்று கேட்டேன். ‘வெற்றி என்பது மற்றவற்றில் இருந்து வேறுபட்ட, மாறுபட்ட தனித்துவம் நிறைந்த நேர்முக உந்து சக்தியுடன் முன்னோக்கி சுழலும் சக்கரம்’, என அவர் சொன்னார். சக்கரம் சுழலும் போது சக்கரத்தின் ஒரு பகுதி கீழே வரும்; ஆனால் நிற்காது நகரும். சக்கரம் முன்னோக்கிச் செல்லசக்கரத்தின் ஏதாவது ஒரு பகுதி கீழே வந்து வந்து முன்னேறும். கீழே வருவது முன்னோக்கிச் செல்லத்தான் என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிச் சக்கரத்தின் இயல்பு முன்னோக்கி மட்டுமே செல்லும். வெற்றிச் சக்கரத்தில் முயற்சி என்பது வெற்றிச்சக்கரத்தின் பகுதிகள். முயற்சியின் கடமை வெற்றிச் சக்கரத்தை சுழலவைப்பது. வெற்றிச்சக்கரம் எத்திசையிலும் செல்லும். மேடான பகுதியில் ஏறவேண்டுமா ஏறும். பள்ளத்தை கடக்க வேண்டுமா கடக்கும். எப்படி சென்றாலும் சக்கரம் சுழன்றதூரம் தான் வெற்றியின் அளவு. தூர அளவு முற்றுப்பெறாது என்பது தான் உண்மை. நகரும் பாதையில் இடறும் தடைகள் தான் தோல்வி. பாதையின் தன்மைக்கு தகுந்தவாறு சக்கரம் சுழலும். ஆனால் தடைபட்டு நிற்கவே நிற்காது. இன்னொரு பிரத்தியேக தன்மை எங்கே வேகமாக, மெதுவாக சுழல வேண்டும் என்பது தெரியும். வெற்றிச்சக்கரம் நன்றாக இருக்கிறதே எங்கே இருக்கிறது எனக்கேட்டேன். நண்பர் சிரித்தார், பின் பதிலளித்தார், எல்லோரிடமும் இச்சக்கரம் இயற்கையாகவே இணைக்கப் பட்டிருக்கிறது, என நண்பர் சொன்னதை கேட்டேன். நண்பரின் பெயர், விலாசம் தெரிந் தால் எத்தனை விசயங்களை அவரிடமிருந்து பெறமுடியும் அல்லவா?
அவரது பெயர் தன்னம்பிக்கை. முகவரி உங்களுக்கோ. உங்களுக்குள்ளே இருக்கும் தன்னம்பிக்கையை சந்தியுங்கள். எப்போதும் வெற்றி நிச்சயம்.

தன்னம்பிக்கையுடன்
ஆர். முருகேசன்
M.A., M.Phil., Ph.D. (Psy)
மனநல ஆலோசகர்
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்

0 comments:

Post a Comment