Saturday, October 22, 2011

நான் ஒரு வெற்றியாளர்


இப்படி நான் எழுதி வைத்திருப்பது கண்டு சிலர் பல விதமாக பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு வெற்றியாளர் என ஆழ்மனதிற்குள்ளும் எழுதி வைத்துள்ளேன் என்பது அந்த சிலருக்கு தெரியாது. நான் ஒரு வெற்றியாளர் என்று உச்சரிக்கும் போது அல்லது மனதிற் குள்ளேயே சொல்லிக் கொள்ளும் போது கிடைக்கும் தன்னம்பிக்கை, ஆர்வம், நினைத்த காரியத்தை சாதிக்க மேற் கொள்ளும் உத்வேகம், செயல்பாடுகளில் உள்ள விவேகமான வேகம் இவை அனைத்தும் பிறருக்கு தெரிவதில்லை.
நண்பர்களே, நான் ஒரு வெற்றியாளர் என நம்பிக்கை கொள்ளுங்கள் எதை செய்வதாக இருந்தாலும் அதற்கான ஆர்வம் பிறக்கும். ஆர்வத்துடன் நான் ஒரு வெற்றியாளர் என்று சொல்லிப் பாருங்கள். சாதிக்க வேண்டிய செயலுக்கான உத்வேகம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும். நான் ஒரு வெற்றியாளர் என்றசொல் ஆழ்மனதிற்குள் பதிந்து விட உத்வேகம் தெளிவான திட்டத்தை தீட்டும். திட்டத்துடன் நான் ஒரு வெற்றியாளர் என சொல்லிப் பாருங்கள். செயலில் விவேகமான வேகம் தென்படும். பிறகென்ன நீங்கள் மனதிற்குள் சொன்னதுதான். என்ன சொன்னீர்கள் நான் ஒரு வெற்றியாளர் . நிச்சயம் நீங்கள் வெற்றியாளர் தான். நண்பர்களே, ஒரு விஷயத்தை ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டால் அது செயலாக்கம் பெற்றேதீரும். அதனால் தான் இதனை படிக்கும் உங்களையும் இத்தனை நாள் நான் ஒரு வெற்றியாளர் என உதட்டளவில் இருந்து உள்ளம் வரை உச்சரிக்கச் செய்தேன். நீங்கள் ஒரு வெற்றியாளர் என பிறர் சொல்வதைக் காட்டிலும் நான் ஒரு வெற்றியாளர் என நீங்களே சொல்லிக் கொள்ளும்போது கிடைக்கும் சக்தி மிகவும் அதிகம். இது ஒரு வெற்றியாளரின் தாரக மந்திரம். எனவே எப்போதும் சொல்லிக் கொள்ளுங்கள் இப்படி “நான் ஒரு வெற்றியாளர்”.
உங்கள் கையால் அல்லது உங்களின்பால் அன்புகொண்டவரின் கையால் எழுதி, படுக்கையை விட்டு எழுந்ததும் உங்கள் பார்வை படும் இடத்திலும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில், பூஜை அறையில், சாவிக்கொத்து மாட்டும் இடத்தில், காலணிகள் வைக்கும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொண்டால், நான் ஒரு வெற்றியாளர் என்ற இந்த மந்திரம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உளவியல் உண்மை.
- ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)
மனநல ஆலோசகர், மனித வளமேம்பாட்டுப் பயிற்சியாளர்

0 comments:

Post a Comment