Wednesday, January 16, 2013

முள்ளங்கி மருத்துவக் குணங்கள்...


முள்ளங்கி மருத்துவக் குணங்கள்...



முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும்குளிர்ச்சியுண்டாக்கும். 

இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்.
சமைத்துண்ண அதிமூத்திரம்நீர்தடைவயிற்று எரிச்சல்ஊதின உடம்புகுடைச்சல்வாதம்வீக்கம்சுவாசக் காசம்,கபநோய்இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலைமாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறுநீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை மி.லி. ஆக நாள்தோறும் வேளை சாப்பிட்டு வர மலக்கட்டுசிறுநீர்க் கட்டுசூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

இந்த முள்ளங்கியால் வாத நோய்நீர்வடியும் படையான கரப்பான்வயிற்றெரிச்சல்நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலிகாசநோய்தலைவலிமயக்கம்ஆஸ்துமா என்ற இரைப்புகடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் 

சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல்சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலைமாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதுசாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கைகால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக – காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் 
தாது விருத்தி உண்டாகும்

0 comments:

Post a Comment